முன்னாள் அதிபரின் சகோதரரை சித்திரவதை செய்து கொலை - தாலிபான்கள் அட்டுழியம்
ஆப்கானிஸ்தானில் முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தலிபான்கள் சித்ரவதை செய்து கொலை செய்ததாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றியதம் அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார்.

துணை அதிபராக இருந்த அம்ருலே சாலே, தாமே அதிபர் என தனக்குதானே அறிவித்துக்கொண்டார். மேலும், அவரது தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை, பஞ்ச்ஷிர் பகுதியில் தலிபான்களை எதிர்த்து போராடி வந்தது.
பஞ்ச்ஷிர் போராளிகள், தலிபான்களை கொன்று குவித்ததாகவும் ஆயிரக்கணக்கானோரை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்நிலையில் பஞ்ச்ஷிர் பகுதியில் ஏற்பட்ட சண்டையின் முடிவில் அந்த மாகாணத்தை தாங்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தலிபான்கள் அறிவித்தனர்.
அந்த மாகாணத்தில் தலிபான்கள் கொடியேற்றிய வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர். இந்த நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் சண்டையின்போது, அதிபராக அறிவித்துக்கொண்ட அம்ருலே சாலேவின் சகோதரர் ரூகுலா சாலேவை தலிபான்கள் பிடித்தனர்.
அவரை சித்ரவதை செய்து கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்ச்ஷிர் மாகாணத்தை, தலிபான்கள் கைப்பற்றியதாக கூறியிருந்தாலும், தேசிய கிளர்ச்சிப் படையினர் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.