காபூல் விமான நிலையத்தில் தலிபான்கள் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு
காபூல் விமான நிலையத்தில் மக்கள் ஏராளமானோர் கூடியதால் கூட்டத்தை கலைக்க தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வெளியேறியதை அடுத்து நாட்டை தலிபான்கள் கைப்பற்றினர்.இதனையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் அந்நாட்டை விட்டு வெளியேற தொடங்கினார்.
இந்நிலையில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு மக்கள் ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.

இதையடுத்து தலிபான்கள் விமான நிலையத்தில் குவிந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் அந்நாட்டில் விமான சேவை ரத்து செய்யபட்டுள்ளது.இதனால் அங்கு தங்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நிலவி வருகிறது.