காபூல் விமான நிலையத்தில் இதுவரை 40 பேர் உயிரிழப்பு - தாலிபான்கள் அறிவிப்பு

Death Airport Afghanistan Kabul Taliban
By Thahir Aug 18, 2021 09:40 AM GMT
Report

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் மற்றும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் வரை பலியாகியுள்ளதாக தலிபான் தளபதி மொஹிபுல்லா ஹெகமத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களைத் திரும்ப அழைத்து வரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலை முதல் ஆப்கன் மக்களும் பிற நாட்டு மக்களும் ஆப்கனை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

விமானத்தில் இடம் கிடைக்காமல் இறக்கைகளில் தொற்றிக் கொண்டு சென்ற பலர் கீழே விழுந்து பலியாகினர். கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

காபூல் விமான நிலையத்தில் இதுவரை 40 பேர் உயிரிழப்பு - தாலிபான்கள் அறிவிப்பு | Afghanistan Taliban Kabul Airport Death

இதுகுறித்து விமான நிலையம் வெளியே உள்ள தலிபான் கமெண்டர் மொஹிபுல்லா ஹெகமத் கூறியதாவது,

திங்கள்கிழமை முதல் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெளிநாட்டு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 40 பேர் வரை பலியாகியுள்ளனர்.

வெளிநாடு செல்வதற்காக யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம். அனைவரும் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். உங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.