காபூல் விமான நிலையத்திற்கு சீல் - தாலிபான்கள் அட்டூழியம்

Afghanistan Taliban Kabul Airport
By Thahir Aug 30, 2021 04:19 AM GMT
Report

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்திற்கு தாலிபான்கள் சீல் வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்கா, இந்தியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்களும் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் அமெரிக்க ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த விமான நிலையம் மூலமாக மக்கள் அனைவரும் பிற நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

காபூல் விமான நிலையத்திற்கு சீல் - தாலிபான்கள் அட்டூழியம் | Afghanistan Taliban Kabul Airport

இந்நிலையில், தங்கள் நாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அந்நாட்டு மக்களையும் வெளியேற்றும் பணியில் அமெரிக்கா, இத்தாலி மற்றும் இந்திய படையினர் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மீட்புப் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் இரண்டு முறை குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர்.

எனவே, மக்கள் அவசரமாக வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்திருக்கும் நிலையில், தற்பொழுது ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு தாலிபான்கள் சீல் வைத்துள்ளனர்.

மேலும் விமான நிலையத்திற்கு செல்ல கூடிய சாலைகளில் சுங்க சாவடிகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்தின் 3 கதவுகளையும் தாலிபான்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விமான நிலையத்தில் இருந்த மக்கள் அங்கேயே முகாம் அமைத்து தங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.