காபூலில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

Airport Afghanistan Kabul Taliban
By Thahir Aug 27, 2021 10:31 AM GMT
Report

காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலால் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து கடந்த 10 நாள்களாக தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை குண்டுவெடிப்பு நடந்தது. காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், 108 பேருக்கு மேல் பலியாகினர்.

காபூலில் மீண்டும் விமான சேவை தொடக்கம் | Afghanistan Taliban Kabul Airport

இதையடுத்து, பாதுகாப்புக் கருதி நேற்று இரவு முதல் காபூல் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், மீட்புப் பணிகள் முடங்கின.

தற்போது, காபூல் விமான நிலைய பாதுகாப்புக் கட்டுக்குள் வந்ததையடுத்து, மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.