"விடை கொடு எங்கள் நாடே" ஆப்கானிஸ்தானில் விமான நிலையம் நோக்கி ஓடும் மக்கள்

Airport Afghanistan Kabul Taliban
By Thahir Aug 16, 2021 05:38 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில் மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

பலகாலமாக ஆப்கானிஸ்தானில் அரசு ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் இடையே யுத்தம் நடந்து வந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வாழும் பிறநாட்டு மக்களை திரும்ப வரும்படி அந்தந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்காக சிறப்பு விமானங்களை உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அனுப்ப தொடங்கியுள்ளன.

"விடை கொடு எங்கள் நாடே" ஆப்கானிஸ்தானில் விமான நிலையம் நோக்கி  ஓடும் மக்கள் | Afghanistan Taliban Kabul Airport

இதனால் வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிர கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கும்பல் கும்பலாக இரவிலிருந்து தங்கள் நாட்டு விமானங்களுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.