ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா, அமெரிக்கா முடிவு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி தற்காலிக ஆட்சி செய்து வரும் சூழலில், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு விசாக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போல் இந்தியாவுக்கு ஆப்கானில் துணை நின்ற செய்தியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், போன்ற பலருக்கு விசா வழங்க இந்தியாவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கனடாவும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள் உள்பட 20 ஆயிரம் பேருக்கு விசா வழங்குவதாக அறிவித்துள்ளது. துணை தூதரகங்களின் செயல்பாடுகள் குறித்தும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் தீவிரமான ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.