இந்தியர்கள் 150 பேர் கடத்தல்? தாலிபான்கள் மறுப்பு
ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் 150 பேரை தாலிபான்கள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா வாசிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் திரும்ப பெறப்பட்டதால் தாலிபான்கள் நாட்டை கைப்பற்ற தொடங்கினர்.
இதை அடுத்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமானது.
இதையடுத்து அங்கு வசித்து வந்த மக்கள் நாட்டைவிட்டு வெளியேற விமானநிலையத்தில் முற்றுகையிட்டு விமானத்தின் பின் ஓடிய காட்சிகள் உலக அளவில் கவனம் பெற்றது.

ஆப்கானிஸ்தானில் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில் விமானநிலையத்தில் இருந்த இந்தியர்கள் 150 பேரை தாலிபான்கள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா வாசிக் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.