வீடுகளை தீ வைத்து கொளுத்தும் தாலிபான்கள் - ஆப்கான் பெண் கண்ணீர்

House Fire Afghanistan Taliban
By Thahir Aug 22, 2021 12:56 PM GMT
Report

ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் வீடுகளை தாலிபான்கள் தீ வைத்து எரிப்பதாகவும் இந்திய வந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், அங்குள்ள மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.

சில நாடுகள் ஆப்கானிய மக்களை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், சில நாடுகள் ஏற்கனவே பல நாடுகளை சார்ந்த அகதிகளை சேர்த்துள்ளதால், ஆப்கானிய மக்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.

இந்தியா ஆப்கானிய மக்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய விமானப்படை விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் தொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.

மேலும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டும் பணிகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெறுகிறது.

இன்று காலையில் காபூல் விமான நிலையத்தில் 107 இந்தியர்கள் விமானப்படை விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானை சார்ந்த 61 பேர் மீட்டு வரப்பட்டனர். இவர்கள் காலை 10.15 மணியளவில் காசியாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

வீடுகளை தீ வைத்து கொளுத்தும் தாலிபான்கள் - ஆப்கான் பெண் கண்ணீர் | Afghanistan Taliban House Fire

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த பெண்ணிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் கண்ணீர் ததும்ப அவர் தெரிவித்தாவது, " ஆப்கானில் நிலைமை மோசமடைந்து வருகிறது.

 நான், எனது மகள், இரண்டு பேரக்குழந்தையுடன் இங்கு வந்துள்ளேன். எங்களை இந்திய சகோதர, சகோதரிகள் மீட்டு அழைத்து வந்தனர். தலிபான்கள் எங்கள் வீட்டை கொளுத்திவிட்டனர். இந்தியாவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றி " என்று தெரிவித்தார்.