ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்தது புதிய தாலிபான்கள் அரசு

By Thahir Sep 08, 2021 03:00 AM GMT
Report

ஆப்கானிஸ்தானின் பிரதமராக முல்லா முகமது ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை பிரதமராக முல்லா பராதர் செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, தாலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி  அமைத்தது புதிய தாலிபான்கள் அரசு | Afghanistan Taliban Government

கடந்த மாதம் 15ம் தேதி தலைநகர் காபூலுக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றினர். புதிய அரசு அமைப்பது தொடர்பான வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டார்.

அதன்படி, சிராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அரசின் "உள்துறை அமைச்சர்” ஆக நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல், இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சராக மவுலவி அமிர்கான் முத்தாகி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லா அப்துல் ஹக் வாஸிக் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பிரதமராக முல்லா முகமது ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை பிரதமராக முல்லா பராதர் செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. மவ்லவி அப்துல் சலாம் ஹனாபி மற்றொரு துணை பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மவ்லவி காரி பாசிஹுதீன்" ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அரசாங்கத்தின் "இராணுவத் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லா ஹெடையத்துல் பத்ரி தற்காலிக நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஷேக் மொலவி நூருல்லா முனீர், கல்வித் துறையின் அமைச்சராகவும் காரி தின் ஹனிஃப் பொருளாதார துறையினர் தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்குமான அரசாக புதிய அரசு அமையும் என்று தாலிபான்கள் அறிவித்திருந்தனர். தற்போது அமைந்துள்ள புதிய அரசில் பெண்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.