முடிஞ்சா பிடி பார்க்கலாம்..போட்டி போட்டுக் கொண்டு பொம்மை கார் ஓட்டி விளையாடிய தாலிபான்கள்

Afghanistan Taliban Game
By Thahir Sep 14, 2021 08:13 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய உற்சாகத்தில் ரோலர் கோஸ்டர், பம்பர் கார்களில் குதூகலத்துடன் தலிபான்கள் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப்பிறகு அமெரிக்க ராணுவப் படை திரும்பப்பெற்றதையடுத்து தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப்பிடிப்பதற்காக பல்வேறு உள்நாட்டுக்கலவரங்கள் எல்லாம் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் மக்கள் சிலர் தாலிபான்களின் மேற்கொள்ளும் அடிமைத்தனத்திலிருந்து தப்பிப்பதற்காகப் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்லத்தொடங்கிவிட்டனர்.

முடிஞ்சா பிடி பார்க்கலாம்..போட்டி போட்டுக் கொண்டு பொம்மை கார் ஓட்டி விளையாடிய தாலிபான்கள் | Afghanistan Taliban Game

இந்நிலையில் தான் ஆப்கனில் ஒவ்வொரு பகுதியாக தலிபான்கள் அவர்களின் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் ஒரு பகுதியாக தலைநகர் காபூலைக் கைப்பற்றிய ஒரு நாள் கழித்து அதன் உற்சாகத்தில் தலிபான் உறுப்பினர்கள், காபூலில் உள்ள தீம் பார்க்கில் ஆயுதங்களுடன் புகுந்த தாலிபான்கள அங்கிருந்த ராட்டினம், டாட்ஜெம் எனப்படும் பேட்டரி கார்களில் உற்சாகத்துடன் விளையாடினர்.

இவர்களில் சிலர் கையில் ஆயுதங்களுடன் குதிரை சவாரிகள் எல்லாம் மகிழ்ச்சியுடன் மேற்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.