"ஆப்கானிஸ்தான் சூழல் கவலையளிக்கிறது" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
டெல்லியில் ஆப்கான் விவகாரம் தொடர்பாக நடைபெறும் மூன்றாவது மாநாட்டில் 5 மத்திய ஆசியை நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் ஆப்கான் விவகாரம் தொடர்பாக நடைபெறும் மூன்றாவது மாநாட்டில் 5 மத்திய ஆசியை நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள மாநாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், ஆப்கான் மக்களுக்கு உதவ கூடிய வழிகளை கண்டறிய வேண்டும் என வருத்தம் தெரிவித்தார். ஆப்கானுடன் ஆழமான உறவு கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்,
ஆப்கானில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் பயங்கரவாத பயிற்சி, பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி, திட்டமிடுதல் போன்றவற்றிக்கு ஆப்கான் மண் பயன்படுத்தக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது.