பட்டினியால் வாடும் ஆப்கான் மக்கள் - உணவு பொருட்களை வழங்கிய கத்தார்

Food Afghanistan Qatar Taliban
By Thahir Sep 16, 2021 02:38 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கத்தார் அரசு தனி விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான்கள் கடந்த மாதம் 15ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நீடித்து வந்தது.

பட்டினியால் வாடும் ஆப்கான் மக்கள் - உணவு பொருட்களை வழங்கிய கத்தார் | Afghanistan Taliban Food Qatar

மேலும் அங்கு நடந்த உள்நாட்டுப் போரினால் ஆப்கானிஸ்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கான் மக்களுக்கு கத்தார் அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

அதாவது, அங்குள்ள மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கத்தார் அரசு வழங்கியுள்ளது.

இந்த அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தோஹா விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலமாக ஆப்கானுக்கு கொண்டு வரப்பட்டன.

குறிப்பாக தலிபான்களுடன் கத்தார் அரசு ஆரம்பத்திலிருந்தே சுமூகமான உறவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.