ஆப்கானிஸ்தானில் உணவுப் பொருட்கள் விலை 4 மடங்கு உயர்வு

Price Food Afghanistan Taliban High
By Thahir Aug 19, 2021 09:25 AM GMT
Report

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தாலும் பொருட்களின் விலை சுமார் 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, ஆப்கனை தாலிபான்கள் பிடித்த உடனே அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது.

ஆப்கானிஸ்தானில் உணவுப் பொருட்கள் விலை  4 மடங்கு உயர்வு | Afghanistan Taliban Food Price High

முன்னர் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களை தற்போது 4 ரூபாய் கொடுத்து வாங்குகின்றோம். பகலான் மாநிலம் 3 மாதங்களாக தாலிபான்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்போது கூட தொழில்கள் அனைத்தும் அமைதியான முறையில் நடைபெற்று வந்தன. அவர்கள் ஆப்கன் முழுவதையும் பிடித்த நாள் முதல் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டனர்.

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமாகி உள்ள நிலையில் அங்கு எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதனால் அத்யாவசிய பொருட்களை வாங்கி மக்கள் வீடுகளில் குவித்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக கடைகளில் அத்யாவசிய பொருட்களின் இருப்பு குறைந்து வருவதால் வர்த்தகர்கள் காய்கறிகள், மளிகை உள்ளிட்ட பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்தியிருக்கின்றனர்.

இதனிடையே பால், காய்கறிகள், மருந்து உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் வரத்து முடக்க தொடங்கியிருக்கிறது. இதனால் அடுத்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.