தலிபான்கள் மீது அதிரடி தாக்குதல்: 5 போ் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் நங்கா்ஹாா் மாகாணத் தலைநகா் ஜலாலாபாத் நகரில் தலிபான்களைக் குறிவைத்து புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 5 போ் உயிரிழந்தனா்.
பெட்ரோல் நிலையமொன்றில் தலிபான்களின் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 தலிபான்கள் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலில் பெட்ரோல் நிலைய ஊழியா் ஒருவரும் ஒரு குழந்தையும் பலியாகினா். மேலும் இரு பகுதிகளில் தலிபான் வாகனங்களின்மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்தது; 2 தலிபான்கள் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், அண்மையில் இத்தகைய தாக்குதல்களை நடத்திய ஐஎஸ்கே பயங்கரவாதிகள்தான் இந்தத் தாக்குதல்களையும் நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.