தாலிபான்களின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்
தாலிபான்களின் பேஸ்புக் கணக்கை முடக்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டு மக்கள் வெளியேற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அங்கு தங்கி இருக்க கூடிய பல்வேறு நாட்டினரை மீட்க மற்ற நாடுகள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் தாலிபான்களின் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் அமெரிக்கா சட்டத்தின் கீழ் பயங்கரவாத அமைப்பைச் சேந்தவர்கள் என்பதால் அவர்களின் கணக்கையும் அவர்களின் ஆதரவாளர்களின் கணக்கையும் முடக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
The Taliban are sanctioned as a terrorist organization under US law & we've banned them from our services under our Dangerous Organisation Policies.This means we remove accounts maintained by/on behalf of the Taliban& ban their praise,support,&representation: Facebook Spox to ANI
— ANI (@ANI) August 17, 2021