ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார் - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

Emmanuel Macron Afghanistan Taliban President of France
By Thahir Aug 17, 2021 08:19 AM GMT
Report

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்களை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, ஐ.நா சபை, ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் மக்களை ஆதரிக்குமாறு அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார் என்று ஐநாவிடம் பிரான்ஸ் அரசு உறுதியளிக்கிறது.

ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார் - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு | Afghanistan Taliban Emmanuel Macron

இதனையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை பிரான்ஸ் எப்போதும் கைவிடாது என்று உறுதி கூறியுள்ளார். 

மேலும் சமையல் பணியாளர்கள், கலைஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்த பிற மக்கள் என்று அனைவரையும் ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.