பெண்களின் சடலங்களுடன் உறவு கொள்ளும் தாலிபான்கள்- பெண் பரபரப்பு தகவல்

Dead Body Afghanistan Taliban Womens
By Thahir Aug 23, 2021 09:00 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் பெண்களை சித்தரவதை செய்வதாகவும் இறந்த பெண்களுடன் தாலிபான்கள் உடல் உறவு கொள்வதாக அந்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் கொடூர முகம் உலகின் முன் அம்பலமாகியுள்ளது. தலிபான்களின் பயங்கரவாதிகள் மட்டுமல்ல, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்தடைந்த பெண்ணின் நிம்மதி புன்னகை தாலிபான் பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தியுள்ளது.

அவர்களில் ஒருவர் தாலிபான் பயங்கரவாதிகள் சிறுமிகளின் இறந்த உடல்களை கூட விட்டு வைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர்களிடமிருந்து மனிதநேயத்தை எதிர்பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தான் பெண்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர் என அவர் கூறினார்.

தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தலிபான்கள் இறந்த உடல்களையும் பாலியல் பலாத்காரம் செய்வதாக இந்தியா வந்தடைந்துள்ள முஸ்கான் கூறினார்.

அந்த பெண் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பெண்களை சித்திரவதை செய்வார்கள், பாலியல் அடிமைகளாக வைத்திருப்பார்கள். கடத்திக் கொண்டு செல்வார்கள், என்ன வேண்டுமானாலும் மனதில் தோன்றியதை செய்வார்கள்.

ஆத்திரத்தில் கொன்ற பிறகும், அவர்கள் உடலை கூட விட்டு வைக்காமல் அதனுடனும் உடல் உறவு கொள்வார்கள். இது வெறும் ஆரம்பம் தான். அந்த மக்கள் நிறைய செய்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பெண்ணை தங்களுடன் அனுப்ப வேண்டும் என்று தாலிபான்கள் விரும்புகிறார்கள் என்று அந்த ஆப்கான் பெண்மணி மேலும் கூறினார்.

அவர்கள் 10-12 வயதுடைய பெண்களை அழைத்துச் செல்கிறார்கள். நாங்கள் மாறிவிட்டோம் என்று ஊடகங்களிடம் பொய் சொல்கிறார்கள். இது வெறும் ஏமாற்று வேலை.'

பெண்களின் சடலங்களுடன் உறவு கொள்ளும் தாலிபான்கள்- பெண் பரபரப்பு தகவல் | Afghanistan Taliban Dead Body Womens

அவர் சிறுமிகளுக்கு மருந்து கொடுத்து மயக்கமடைச் செய்து அவர்களை சவப்பெட்டியில் வைத்து, பாகிஸ்தானுக்கு கடத்தி செல்கிறார்கள். நாங்கள் அங்கு இருந்தபோது, ​​எங்களுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வந்தன.

முன்னதாக, தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் ஆக்கிரமிப்பு பகுதிகளின் மதகுருமார்களிடம் 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை கோரியுள்ளனர்.

இந்த பெண்கள் தங்கள் பயங்கரவாதிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தாலிபான் வற்புறுத்துகிறது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால், அவர் அவர்களை பாலியல் அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறார்கள்.

அண்மையில் ஒரு பெண் உணவை சுவையாக சமைக்காததால் தலிபான் தீவிரவாதிகளால் எரிக்கப்பட்டதாக செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.