ஆப்கானிஸ்தானில் தாலிபான் மூத்த தளபதி சுட்டுக் கொலை - பதற்றம் அதிகரிப்பு

Killed Afghanistan Kabul Taliban Commander
By Thahir Nov 03, 2021 06:16 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் தாலிபான்களின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

காபூலில் மொத்தம் இரண்டு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியாகியுள்ளனர், 50 பேர் படுகாயமடைதுள்ளனர்.

இந்த தாக்குதலின்போது, ராணுவ மருத்துவமனையிலிருந்த தாலிபான் மூத்த தளபதி மௌலவி ஹம்துல்லாஹ் முக்லிஸ் கொல்லப்பட்டதாக ஏ.பி.எஃப். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காபூலை தாலிபான்கள் கைப்பற்றியபோது அதிபர் மாளிகையில் புகுந்த முதல் தலிபான் தளபதி மௌலவி ஹம்துல்லாஹ் எனத் தகவல் வெளியாகியுள்ளது.