குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாலிபான்கள் - திடுக்கிடும் தகவல்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரின் குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆப்கன் போராட்ட படையை சேர்ந்தவரின் குழந்தை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொடூர கொலை நடந்துள்ளது.
தக்கார் மாகாணத்தை சேர்ந்த ஒரு நபர் ஆப்கன் போராட்ட படையினரை சேர்ந்தவர் என தாலிபான்கள் சந்தேகித்தனர்.
இதையடுத்து, சந்தேகத்திற்குரிய அந்த நபரின் குழந்தையை தாலிபான்கள் கொடூரமாக கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை கொன்ற தாலிபான்களின் கொடூரச் செயலுக்கு பல தரப்புகளிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தாலிபான்களுக்கு எதிராக குரல் எழுப்புவோர், போராட்டம் நடத்துவொர் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது ஒரு குழந்தையும் பலியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பின்னர் சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்களோ தாலிபான்கள் இன்னும் அடிப்படைவாத மனநிலையில் இருப்பதை காட்டும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.