ஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு - பொதுமக்கள் பீதி
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இஸ்லாமி ஷரியத் சட்டத்தின் மீது தீவிரமான நம்பிக்கை கொண்டுள்ள தாலிபான்கள்.
பெண்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார்.
தற்போது அந்நாட்டில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதிற்கு உட்பட்ட ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்று வருகிறது.
அந்நாட்டில் காபூல் நகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இதையடுத்து நங்கர்ஹார் மாகாணத்தில் தாலிபன்கள் இலக்காக கொண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை நங்கர்ஹார் மாகாணத்தில் தாலிபான்கள் சென்ற வாகனங்கள் மீது குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. தலீபான் இயக்க உறுப்பினர் உள்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.