ஆப்கானில் பெண்களை ரப்பர் டியூப்பால் அடித்து விரட்டி தாலிபான்கள் அட்டுழியம்
தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ள ஆப்கானிஸ்தானில் பெண்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தாலிபான்களை எதிர்த்தவர்கள் தேடி தேடி வேட்டையாடப்படுவதால் மக்களிடம் பெரும் அச்சம் நிலவுகிறது. முன்னாள் ராணுவத்தினர் மற்றும் நாட்டோ படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தியர்களை தேடி தேடி பழிவாங்கும் நடவடிக்கைகளை தாலிபான்கள் தொடங்கிவிட்டனர்.

தலைநகர் காபூலில் முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களை கொத்து கொத்தாக கார்களில் கடத்திச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
சம உரிமை கேட்கும் பெண்களின் போராட்டமும் ஆப்கனில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாலிபான்கள் துரத்தி துரத்தி சவுக்கால் அடிக்கும் கொடூர காட்சிகளும் வெளியாகி சர்வதேச சமூகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
This is how #Taliban treats women in Kabul, #Afghanistan #NoToTaliban pic.twitter.com/GRNg4QawpQ
— Asad Saad (@AsadSaad1984) September 13, 2021
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை வசப்படுத்தியதை தொடர்ந்து பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
காலியாக கிடக்கும் பொழுது போக்கு பூங்காக்களில் விளையாடி நேரத்தை செலவிடும் தாலிபான்கள் கடை வீதிகளில் துப்பாக்கிச் சூடு பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று தாலிபான்கள் கூறி இருந்தனர். ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகள் அதற்கு எதிர்மறையாக இருப்பது ஆப்கானில் மக்களிடம் அச்சத்தை அதிகரித்துள்ளது.