பாதுகாப்புத்துறை அமைச்சரை குறிவைத்து தாக்கிய தாலிபான்கள் - 6 பேர் பலியான பரிதாபம்

afghanistan taliban attack
By Petchi Avudaiappan Aug 04, 2021 06:13 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புத் துறை அமைச்சரை குறிவைத்து நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும், தாலிபன் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. அங்கு ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து நிலைமை மோசமாகி வருகிறது. தாலிபன்கள் நாட்டை முழுவதுமாக கைப்பற்றும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேசமயம் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு உதவியாக அமெரிக்க படை வான் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார். இதனிடையே தலைநகர் காபூலில் பாதுகாப்பு நிறைந்த ஷெர்பூர் பகுதியில் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் முகமதுவின் வீட்டை குறித்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர் வீட்டில் இல்லாத நிலையில் துப்பாக்கியுடன் நுழைந்த 3 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்த அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பொதுமக்களும், 3 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.