உயிரிழந்தவரின் சடலத்தை கிரேனில் கட்டி தொங்கவிட்டு தாலிபான்கள் அட்டூழியம்
Afghanistan
Taliban
By Thahir
ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் கிரேன் ஒன்றில் உயிரிழந்தவரின் உடலை தாலிபான்கள் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெராட் நகரில் உள்ள மைய சதுக்கத்திற்கு உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை தாலிபான் அமைப்பினர் எடுத்து வந்தனர்.

பின்னர் அதிலிருந்த ஒரு உடலை மட்டும் அவர்கள் ராட்சத கிரேனில் கட்டி தொங்கவிட்டனர்.மீதம் இருந்து மூன்று உடல்களும் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இவர்கள் 4 பேரும் கடத்தலில் ஈடுபட்ட போது சிக்கியதாக தாலிபான் அமைப்பினர் தெரிவித்தனர்.
கொடிய தண்டனைகளை தாலிபான்கள் அரசு அமல்படுத்துவதால் இக்காட்சியை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.