ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதல் அதிகரிப்பு..அச்சத்தில் வெளியேறும் மக்கள் - ஐநா கவலை

Afghanistan Taliban
By Thahir Aug 14, 2021 10:23 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மக்கள் உயிருக்கு பயந்து அந்நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

அந்நாட்டில் முகாமிட்டுருந்த அமெரிக்கா ராணுவம் அங்கிருந்து வெளியேறி வருகிறது.இம்மாத இறுதிக்குள் படைகள் முழுவதும் வெளியேறிவிடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால் அந்நாட்டில் தாலிபான்களின் ஆதிக்கத்தால் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. தாக்குதல் நடைபெறுவதால் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதல் அதிகரிப்பு..அச்சத்தில் வெளியேறும் மக்கள் - ஐநா கவலை | Afghanistan Taliban

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 மேலும் தலைநகர் காபுல் போன்ற முக்கிய நகரங்களையும் தலிபான்கள் நெருங்கிவருகிறார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலால் மக்கள் வெளியேறி வருவதற்கு ஐநா கவலை தெரிவித்துள்ளது.