ஆப்கனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அண்டை நாடுகளிலும் பிரதிபலிக்க வாய்ப்பு: பிரதமர் மோடி

india afghanistan pmmodi
By Irumporai Sep 17, 2021 01:58 PM GMT
Report

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில்,காணொலி காட்சி மூலம்  பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது ஆப்கான் நிலவரம் குறித்து பேசிய பிரதமர் மோடி: அடிப்படைவாத கொள்கைகளை உலகம் முழுவதும் ஊக்கப்படுத்த ஆப்கனின் சூழல் வழிவகுக்கும் அபாயம் உள்ளது என்றும் ஆப்கனில் நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்து விடும் என தெரிவித்தார்.

மேலும், ஆப்கனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுபான்மையினர் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பிரதிநித்துவம் அவசியம். தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கிய நிறுவனங்கள் மற்றும் மரபுகளுக்கு இடையே ஒரு வலுவான நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு  கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் பங்கேற்றார், எஸ்.சி.ஓ.வில் சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் நாடுகள் உள்ளன.