ஆப்கானில் உள்ள சீக்கியர்களும் இந்துக்களும் பயப்படவேண்டாம் : தலிபான்கள் உறுதி?

Sikhs Hindus Talibansafety
By Irumporai Aug 20, 2021 12:41 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவுக்கு நேரில் சென்ற தலிபான்கள் அங்கு உள்ள சீக்கியர்கள் மறறும் இந்துக்கள் பயப்பட வேண்டாம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்' என உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை முழுதும் தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அங்கு உள்ள இந்துக்களும் சீக்கியர்களும் தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவுக்கு திரும்புவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில் 200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்க வேண்டும்'என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில் காபூலில் உள்ள குருத்வாராவுக்கு தலிபான்கள் சென்றுள்ளனர்

அங்கு குருத்வாரா தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளதாகவும் சீக்கியர்கள்மற்றும் இந்துக்கள் அச்சப்பட தேவையில்லை என அவர்கள் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ'வை அகாலி தளத்தின் மூத்த தலைவரும் டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவருமான மஜிந்தர் சிங் சிர்சாவும் அந்த 'வீடியோ'வை சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் காபூலில் உள்ள குருத்வாரா நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அச்சப்பட தேவையில்லை என தலிபான்கள் கூறியுள்ளதாக குருத்வாரா நிர்வாகிகள் தெரிவித்துஉள்ளதாக   சிர்சா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.