'விராட் கோலியை' முறைத்த கிரிக்கெட் வீரர் 24 வயதிலேயே எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் 'நவீன் உல் ஹக்' தனது ஒய்வு முடிவினை அறிவித்துள்ளார்.
நவீன் உல் ஹக்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆவார் 24 வயதான நவீன் உல் ஹக். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 7 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
27 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் தற்போது விளையாடுவதற்கு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் 'லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்' அணியில் விளையாடினார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் நவீன்.
ஒய்வு
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு உடல்நலம் ஒத்துழைப்பு தராததால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதே தமக்கு கடைசி ஒரு நாள் போட்டிகளாக இருக்கும் என்றும் நவீன் உல் ஹக் கூறியுள்ளார்.
மேலும், தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.