காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு - தலிபான்கள் அட்டூழியம் ஆரம்பம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் படையெடுத்து வருகின்றனர்.
அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அப்பகுதியில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க பிரதமராக பதவியேற்று கொண்ட பைடன் ஆப்கனில் இருந்த அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் நேற்று தலைநகரை சுற்றிவளைத்தனர். ஆப்கானை விட்டு அதிபர் மற்றும் துணை அதிபர்கள் வெளியேறியதையடுத்து, அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதன்மூலம், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். மேலும், விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கையை மீறிச் சென்றது.
இதையடுத்து வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களின் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest pictures from #Kabul Airport#Taliban #Talibans #TalibanTakeover #Afghanistan #AfghanistanBurning #Afghanishtan #Afganistan #Kabulfall pic.twitter.com/CywCScXrMG
— Vivek Bajpai विवेक बाजपेयी (@vivekbajpai84) August 16, 2021
இந்நிலையில் ஆப்கானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அவசரகால பயன்பாட்டிற்காக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் தயார்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.