ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - உலுங்கிய கட்டிடங்களால் அலறிய மக்கள்...- வீடியோ தொகுப்பு...!

Viral Video Afghanistan Earthquake
By Nandhini Feb 23, 2023 09:35 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இன்று ஆப்கானிஸ்தானில் மட்டும் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது உலுங்கிய கட்டிடங்களால் மக்கள் அலறிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம் - உலுங்கிய கட்டிடங்களால் அலறிய மக்கள்

ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோவில் 6.8ஆக பதிவானது.

இதனையடுத்து, மீண்டும் காலை 6.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 5 ஆக பதிவானது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத்தில் மீண்டும் காலை 7.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவானது. தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

வீடு குடியிருப்பு, அலுவலக கட்டிடங்கள், விமான நிலையங்கள் இந்த நிலநடுக்கத்தில் பயங்கரமாக உலுங்கின. இந்நிலையில், தற்போது பிற்பகல் 5-வது முறையாக பைசாபாத்திலிருந்து 287 கிலோ மீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் ஆப்கானிஸ்தானை மட்டுமல்லாமல் அண்டை நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் உலுங்கிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

afghanistan-earthquake-viral-video