திசையெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்; 800 பேர் பலி - 2500க்கும் மேற்பட்டோர் காயம்!
நிலநடுக்கத்தால், சுமார் 800 பேர் உயிரிழந்தனர்.
நிலநடுக்கம்
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை கட்டடங்கள் குலுங்கின.
குனாரில் மட்டும் சுமார் 800 பேர் உயிரிழந்ததாகவும், 2500 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
800 பேர் பலி
நங்கர்ஹார் மாகாணத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்ததாகவும், 255 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து ஐ.நா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், " ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியை தாக்கி நூற்றுக்கணக்கான உயிர்களை நிலநடுக்கம் பலிகொண்டுள்ளது.
இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவசர உதவி மற்றும் உயிர்காக்கும் ஆதரவை வழங்குவதற்கு ஐ.நா. பேரிடர் மீட்பு குழுக்கள் களமிறங்கி உள்ளன" என்று தெரிவித்துள்ளது.