Tuesday, Apr 29, 2025

இலங்கையிடம் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி... - பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆப்கானிஸ்தானியர் - வைரலாகும் வீடியோ

Cricket Viral Video Afghanistan Asia Cup 2022
By Nandhini 3 years ago
Report

இலங்கையிடம் பாகிஸ்தான் அணி தோற்றதையடுத்து மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் வீதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20

துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி நேற்று நடைபெற்று முடிந்தது.

இரு பிரிவுகளாக 6 அணிகள்

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை

துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் நேற்று முன்தினம் மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி இலங்கை அணி அசத்தி இருக்கிறது.

afghanistan-cricket-funs-viral-video

பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆப்கானிஸ்தானியர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோற்று கோப்பையை கை நழுவி விட்டது.

இலங்கையிடம் பாகிஸ்தான் அணி தோற்றதையடுத்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் காபூல் நகரில் வீதிகளில் இறங்கி பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.