வறுமையால் 9 வயது சிறுமியை முதியவருக்கு விற்ற கொடூர தந்தை

Child Afghanistan Sales Old Men
By Thahir Nov 04, 2021 06:12 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தற்போது, அந்நாட்டில் தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆனால், இதுவரை உலக நாடுகள் ஆப்கானிஸ்தானின் நலன் கருதி அளிக்கப்பட்டு வந்த பொருளாதார உதவிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தற்போதைய தாலிபான்கள் அரசு கடும் பொருளாதார நெருக்கடியால் விழி பிதுங்கி வருகிறது. தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் சிக்காமல் இருக்க, அப்பாவி மக்கள் பல ஆயிரம் பேர்கள் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் வெளியேறினர்.

ஆனால், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத அன்றாடம் பிழைப்புக்கு அல்லல் படும் மக்கள் தற்போது ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் தற்போது திருமணம் என்ற பெயரில் தங்களின் பிஞ்சு பிள்ளைகளை முதியவர்களுக்கு விற்பனை செய்யும் கொடூரம் சமீப மாதங்களாக அரங்கேறி வருகிறது.

வறுமை காரணமாகவே பெரும்பாலான குடும்பங்கள் இதுபோன்று தங்கள் பிள்ளைகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வறுமையால் 9 வயது சிறுமியை முதியவருக்கு விற்ற கொடூர தந்தை | Afghanistan Child Sales Old Men

கடந்த மாதம் 9 வயதான பர்வானா மாலிக் என்ற சிறுமி, சொந்த குடும்பத்தினரால் 55 வயது முதியவருக்கு விற்கப்பட்டுள்ளது சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

பர்வானா மாலிக்கின் குடும்பம் வறுமையால் நாளும் போராடி வந்த நிலையில் அப்துல் மாலிக் தமது 12 வயது மகளை சில மாதங்கள் முன்னர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

வறுமையால் 9 வயது சிறுமியை முதியவருக்கு விற்ற கொடூர தந்தை | Afghanistan Child Sales Old Men

இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது தமது 9 வயது மகளையும் விற்பனை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த தந்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், தாம் படிக்க வேண்டும் ஆப்கானிஸ்தானில் ஒரு ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என குறித்த 9 வயது சிறுமி பர்வானா தெரிவித்துள்ளார்.