நடுவானில் பறந்த அமெரிக்கா விமானத்தில் குழந்தை பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்

America Baby Afghanistan Taliban Lady Delivery
By Thahir Aug 22, 2021 11:54 AM GMT
Report

அமெரிக்க விமானத்தில் நடுவானில் குழந்தை பெற்ற ஆப்கன் பெண்! அமெரிக்க விமானத்தில் நடுவானில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் பலர் வெளிநாடுகளுக்கும் தப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆப்கன் நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் அமெரிக்க விமானத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அமெரிக்க விமானத்திலேயே நடுவானில் அவருக்கு குழந்தை பிறந்தது.

நடுவானில் பறந்த அமெரிக்கா விமானத்தில் குழந்தை பெற்ற ஆப்கானிஸ்தான் பெண் | Afghanistan America Taliban Lady Delivery Baby

இதனையடுத்து அந்த விமானம் அமெரிக்கா சென்று அடைந்தவுடன் தாயும் குழந்தையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது இருவரும் நலம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆப்கன் நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அமெரிக்கப் போர் விமானத்தில் நடுவானில் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது