வெடிக்காத குண்டுகளுக்கு பலியான 700 அப்பாவி குழந்தைகள் : யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல்..!

India Child Abuse Afghanistan
By Anbu Selvam Mar 29, 2023 10:28 AM GMT
Anbu Selvam

Anbu Selvam

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் வெடிக்காத கன்னி வெடிகளில் சிக்கி 700 மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போர்

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான உள்நாட்டு போரில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினார்கள்.

தற்போது அந்நாட்டில் தாலிபன் ஆட்சி நடைபெற்றுவருகிறது .மக்கள் புதிய கட்டுப்பாடுகளாலும், வேலையின்மை , வறுமை ஆகியவற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் .

செயலிழக்காத கன்னிவெடிகள்

இந்த நிலையில் ,ஆப்கானிஸ்தானின் யுனிசெப் அமைப்பு சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது .

அந்த செய்தியில் 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள் மற்றும் வெடி பொருட்களால் தற்போது வரை 700 -க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது .

வெடிக்காத குண்டுகளுக்கு பலியான 700 அப்பாவி குழந்தைகள் : யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல்..! | Afghanistan 700 Children Killed Report

பலியாகும் குழந்தைகள்

இந்த வெடிவிபத்துகள்  பற்றி காபூல் நகர வாசிகள் கூறுகையில் ,வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக மலைப்பகுதில் கிடைக்க கூடிய குச்சிகள் மற்றும் நிலக்கரிகள் சேகரிக்க குழந்தைகள் மலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள் .

வெடிக்காத குண்டுகளுக்கு பலியான 700 அப்பாவி குழந்தைகள் : யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல்..! | Afghanistan 700 Children Killed Report

மலைப்பகுதிகளில் போர் நடைபெற்ற காலத்தில் பெருமளவில் கன்னி வெடிகள் புதைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் மலைப் செல்லும் பொது செயலிழக்காத கன்னி வெடிகளால் உயிரிழக்கிறார்கள் .

கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் ,வெடிக்கதா குண்டுகளை விற்பதற்காக சேகரித்த போதும் குண்டு வெடித்து 8 நபர்கள் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.