ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு - 5 பேர் பலி
Afghanistan
Explosion
5 Killed
By Thahir
வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலின் வடக்குப் பகுதியில் இன்று வெடி குண்டு தாக்குதல் நடத்தபட்டது.
இந்த தாக்குதலில் 5 -பேர் பலியகினர். 7- பேர் படுகாயம் அடைந்தனர். வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமே தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.