விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை - ஆட்டத்தை ஆரம்பித்த தாலிபான்கள்

afghanistan sportsforwoman Talibanfighters
By Petchi Avudaiappan Sep 08, 2021 05:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 ஆப்கானிஸ்தானில் விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனிடையே அங்கு பிரதமர், துணை பிரதமர், ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், துணை வெளியுறவு அமைச்சர் ஆகிய பதவிகளுக்கான தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் விளையாட பெண்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளார்.

விளையாட்டு என்பது பெண்களுக்கான முக்கியமானதாக பார்க்கப்படவில்லை. கிரிக்கெட்டில் பெண்கள் அவர்கள் முகம் மற்றும் உடலை மறைக்காத சூழ்நிலை ஏற்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

நாங்களும் எங்கள் இஸ்லாமிய விதிகளை விடமாட்டோம். மேலும் ஷாப்பிங் போன்ற தேவைகளின் அடிப்படையில் பெண்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் அஹ்மதுல்லா வாசிக் கூறியுள்ளது சர்வதேச விளையாட்டு அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.