ஆப்கானில் வாலிபால் அணி வீராங்கனை தலை துண்டித்து கொலை - தாலிபான்கள் அட்டகாசம்
ஆப்கானிஸ்தானில் வாலிபால் அணி வீராங்கனை தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி பொறுப்பேற்ற தாலிபான்கள் பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு, விளையாட்டு உள்ளிட்ட பல விஷயங்களில் அவர்களுக்கு அநீதி இழைத்து வருகின்றனர். குறிப்பாக விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பெண்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மகளிர் வாலிபால் அணியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் தலையை தாலிபான்கள் துண்டித்து கொலை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.மஹ்ஜபின் ஹகிமி என்ற தேசிய ஜூனியர் பெண் வீராங்கனை கொலை செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து வெளியில் பேசக்கூடாது என அவளுடைய குடும்பம் அச்சுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அணியின் பயிற்சியாளர் ஊடகம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mahjabin Hakimi, a member of the Afghan women's national volleyball team who played in the youth age group, was slaughtered by the Taliban in Kabul. She was beheaded.
— Sahraa Karimi/ صحرا كريمي (@sahraakarimi) October 19, 2021
@EUinAfghanistan @unwomenafghan https://t.co/wit0XFoUaQ