ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணி இப்ப எங்க இருக்குது தெரியுமா?
ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக போர்ச்சுகல் அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் விளையாட பெண்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளார். விளையாட்டு என்பது பெண்களுக்கான முக்கியமானதாக பார்க்கப்படவில்லை. கிரிக்கெட்டில் பெண்கள் அவர்கள் முகம் மற்றும் உடலை மறைக்காத சூழ்நிலை ஏற்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக் தெரிவித்திருந்தார்.
இதனால் பெண் வீராங்கனைகளுக்கு தாலிபான்களால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள பல்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கால்பந்து அணி பிரபலமாக செயல்பட்டு வந்த நிலையில், அவர்கள் தற்போது போர்ச்சுகல் நாட்டுக்கு சென்றுள்ளனர். அந்த வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக போர்ச்சுகல் அரசு அறிவித்துள்ளது. இதனால் வீராங்கனைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.