‘எங்க சுடு பாப்போம்...வந்துட்டான் துப்பாக்கியை தூக்கிட்டு’ - வைரலாகும் தாலிபான் vs பெண்ணின் புகைப்படம்
ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் தலிபான்களின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதை எதிர்த்து காபூலில் தெருக்களில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பெண் ஒருவர் தலிபானின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தி புகைப்படக்காரர் ஜாரா ரஹிமி இந்த படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே அங்கு பெண்கள் தாலிபான்களுக்கு நேருக்கு நேர் எதிர்ப்பது தொடர்கதையாகிவ் வருவது குறிப்பிடத்தக்கது.