நான் தான் அடுத்த அதிபர்.. எனக்குதான் அந்த உரிமை இருக்கு : ஆப்கன் துணை அதிபர் ட்விட்!

Afghanistan Talibans Amrullah Saleh
By Irumporai Aug 17, 2021 03:50 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கான் அதிபர் நாட்டை விட்டு தப்பிவிட்ட நிலையில் சட்டப்படி நானே அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார். 

 ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை20 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக வெளியேறிய நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தாலிபான்கள் ஆப்கானை ஆக்கிரமித்துள்ளதால் அந் நாட்டின் அதிபர் முகமது அஷ்ரப் கனி , நாட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் ஆப்கன் துணை அதிபர் அம்ருல்லாஹ் சலோ தனது ட்விட்டர் பதிவில்:

தற்போதைய ஆப்கன் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் இறந்துவிட்டாலோ, ராஜினாமா செய்துவிட்டாலோ, அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலோ , சட்டப்படி துணை அதிபர் அதிபராக வர வேண்டும்.

அதன்படி அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால், நான் தான் அடுத்த அதிபர், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஒரு மித்த கருத்துடன் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் ட்விட் செய்துள்ளார்.