ஆப்கானில் பெண்களுக்கு முன்னுரிமை தந்து அரசானை வெளியிட்ட தாலிபன்கள்
முதல்முறையாக தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
1996-ற்கு பிறகு மீண்டும் ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபன்கள், அந்நாட்டு பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர்.
ஆனால், அதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை தாலிபன்கள் எடுக்காமலே இருந்து வந்தனர்.
அங்கு அமைச்சரவையில் பெண்கள் யாருமே நியமனம் செய்யப்படவில்லை, பல்கலைகழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை, ஸ்கிரீன் உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வைப்பதாக சொல்லி உள்ளனர்.
மேலும் ஆடைக் கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் கொண்டு வந்துவிட்டனர்.பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்த வேண்டும், மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துவிட்டனர். கடந்த 1996-2001ம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சியில் பெண்களுக்கு இப்படித்தான் பல தடைகள் இருந்தன.
ஆனால், ஆட்சிக்கு வந்த முதல்நாள், பெண்களுக்கு சம நீதி, சம உரிமை வழங்குவோம் என்று சொல்லி இதுநாள் வரை வழங்காதது சர்வதேச அளவில் தாலிபன்களுக்கு நெருக்கடியை தந்துள்ளது.
சர்வதேச நெருக்கடிக்கு பணியும் விதமாக முதல் கட்டமாக பெண்களுக்கு உரிமைகள் தாலிபன்கள் ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாலிபன்கள் வெளியிட்டுள்ள அரசானையில், “பெண்களை ஒரு சொத்தாகக் கருதக்கூடாது,பெண்களைத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தக் கூடாது, அவர்களின் சம்மதம் பெற்ற பின்புதான் திருமணம் நடத்தப்பட வேண்டும்,
ஒரு பெண்ணை அமைதிக்கு ஈடாகவோ அல்லது பகைமையை முடிவாகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.
பெண்களை சொத்தாகக் கருதி அவரை கைமாற்றுவதோ, அல்லது விற்பனை செய்வதோ கூடாது, கணவரை இழந்த பெண்களுக்குக் கணவரின் சொத்தில் பங்கு வழங்கிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது..