தோனி சொன்ன அந்த அட்வைஸ் முக்கியமானது - தோனியை புகழ்ந்து தள்ளும் ரஷித் கான்
ஐ.பி.எல் தொடர் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சேர்ந்து விளையாடும் வாய்ப்பை வழங்குகிறது. இதில் பலரும் சிறந்த நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.
சென்னை அணியின் கேப்டன் தோனி போட்டிகள் முடிந்த பிறக்கு எதிரணியைச் சேர்ந்த இளம் வீரர்களுடன் பேசுவது வழக்கம். இந்தப் புகைப்படங்கள் பல சமயங்களில் வைரலாகியுள்ளன.
அப்படி ஒரு சமயத்தில் தோனி தனக்கு வழங்கிய முக்கியமான அட்வைஸை பகிர்ந்துள்ளார் ஆப்கான் வீரர் ரஷித் கான். இவரி ஐ.பி.எல் தொடரின் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.

ரஷித் கான் தெரிவிக்கையில், ”எம்.எஸ்.தோனியின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அவருக்கு கீழ் விளையாடுவது, அதில் இருந்து கிடைக்கும் அனுபவமும், எனது கிரிக்கெட் வாழ்வுக்கு மிக முக்கியம்.
ஒரு பந்துவீச்சாளருக்கு, விக்கெட் கீப்பர் என்பவர் மிகவும் தேவை. அப்படி பார்க்கும் போது, தோனியை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை. தோனியின் அட்வைஸ் ஒவ்வொரு முறையும் போட்டி முடிந்தவுடன் நான் அவரிடம் அறிவுரை பெறுவேன்.
கடந்த முறை அவர், நீ ஃபீல்டிங் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத நேரங்களில் நீ, மிகவும் சிரமப்பட்டு கீழே விழுந்து பந்தை தடுக்கிறாய். ஒரே ஒரு ரஷித் கான் தான் உள்ளார். மக்கள் அவரது ஆட்டத்தை காண காத்துள்ளனர். உனக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் என்ன செய்வது. நான் ஜடேஜாவுக்கும் இதே அறிவுரையை தான் கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.