ஆப்கானில் இருந்து இந்தியா வந்த 10 பேருக்கு கொரோனா - அதிர்ச்சி தகவல்
india
peoples
afghan
arrive
10 persons corona
By Anupriyamkumaresan
ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
காபூலில் இருந்து 81 பேர் சிறப்பு விமானம் மூலம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் டெல்லி விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அவர்கள் சால்வா என்ற இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைவரும் சாவ்லாவில் உள்ள இந்தோ திபெத்திய போலீஸ் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.