ஆப்கான் நிலை குறித்து திருமாவளவன் ஆவேசம்
உலகின் எந்த மூலையிலும் மத அடிப்படைவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடக்கூடாது என ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 59வது பிறந்த நாளையொட்டி, அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்கைக் குன்றாக நின்று ஒரு திராவிட சிறுத்தையாக பணியாற்றி கொண்டிருக்கிறார் திருமாவளவன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்மை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதாகவும் அவருக்கு தம் நெஞ்சார்ந்த நன்றி எனக் கூறினார்.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு உலகின் எந்த மூலையிலும் மத அடிப்படைவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடக்கூடாது, வலிமை பெற்று விடக்கூடாது என்றும், ஆப்கானிஸ்தானில் நடப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.