தலிபான்களிடமிருந்து தப்பித்த சிறுமியின் புகைப்படம் வைரல்

Belgiumairport Afghan Girl Best Picture This Year
By Irumporai Aug 28, 2021 12:15 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிலிருந்து சுதந்திரமாக பெல்ஜியம் திரும்பிய சிறுமியின் ஒருவரின் படத்தை பகிர்ந்து அந்நாட்டு பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார் ஆப்கானிலிருந்து சுதந்திரமாக பெல்ஜியம் திரும்பிய சிறுமி ஒருவரின் படத்தை பகிர்ந்து அந்நாட்டு பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்த நிலையில், அந்நாட்டு மக்கள், வெவ்வேறு நாடுகளுக்கு தஞ்சமடைந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஆப்கானிலிருந்து தப்பி பெல்ஜியம் நாட்டிற்கு வந்த சிறுமி, சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் துள்ளி குதித்து ஓடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்த, பெல்ஜியம் நாட்டு பிரதமர் காய் வெர்ஹாப் ஸ்டாட் மற்ற நாடுகளிலிருந்து தஞ்சமடைவோருக்கு ஆதரவளித்தால், இது தான் விளைவு என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி,Welcome to Belgium, little girl பெல்ஜியத்திற்கு வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.