ஆப்கனில், அமெரிக்க ராணுவ விமானத்தில் இருந்து கீழே விழுந்தது யார் தெரியுமா? வெளியான அதிர்சி தகவல்!

Afghan football player US evacuation flight
By Irumporai Aug 19, 2021 08:28 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர், அந்நாட்டின் கால்பந்து வீரர் என்ற தகவல் வெளியாகியுள்ளது .

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றி. போர் நிறைவு பெற்றதாகவும், ஆட்சி பொறுப்பை ஏற்பதாகவும் அறிவித்தனர்.

தலிபான்களின் இந்த நடவடிக்கை அந்த நாட்டு மக்களை பதற வைத்தது, ஆப்கன் மக்கள் பலரும் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள அண்டை நாடுகளுக்கு தஞ்சமடையத் தொடங்கினார்.

மேலும், நாட்டை விட்டு வெளியேற  அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் பேருந்தில் ஏறுவது போல விமானத்தின் டயரை பிடித்துக்கொண்டு பலரும் மிகவும் ஆபத்தான சூழலில் உயிரை பயணம் வைத்து தப்பிச்சென்ற சம்பவம் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

அப்படி தப்பிச்சென்றபோது விமானம் சில நூறு அடிகள் சென்றபோது விமானத்தின் டயரை பிடித்துச் சென்ற நபர் ஒருவர் பிடி நழுவி வானில் இருந்து கீழே விழுந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியது.

மேலும், ஆப்கனின் பரிதாப நிலையை கண்ணீரை வர வைத்தது. இந்த நிலையில் தற்போது, விமானத்தில் இருந்து கீழே விழுந்த நபர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஆப்கான் செய்தி நிறுவனமான ஹரியானா வெளியிட்ட செய்தியில் உயிரிழந்த நபரின் பெயர் ஜாகி அன்வாரி என்றும், அவர்தான் அமெரிக்காவின் ராணுவ விமானமான போயிங் சி-17 என்ற விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர் என்றும் தெரிவித்துள்ளது.

ஜாகி அன்வாரி ஆப்கான் அணியின் தேசிய கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். ஜாகி அன்வாரிக்கு வெறும் 19 வயதே ஆகியுள்ளது. ஒரு இளம் கால்பந்து வீரர் இதுபோன்று கொடூரமாக தருணத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பலரும் சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விமானத்தின் லேண்டிங் கியர் எனப்படும் அந்த சக்கரத்தை உள்ளே இழுத்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.