கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் மீது ஆஃப்கானிஸ்தான் ரசிகர்கள் தாக்குதல்
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் மீது ஆஃப்கானிஸ்தான் ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் மிரட்டல் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, ஆஃகானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைபட்ட நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் போக்கு மாறியது.
பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா கடைசி ஓவிரின் முதல் 2 பந்துகளில் சிக்சர்களை வீசினார்.இதன் மூலம் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணிக்கு மிரட்டல் வெற்றியை பெற்று தந்த நசீம் ஷாக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ரசிகர்கள் மோதல்
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் அணி ரசிகர்கள் மீது இருக்கைகளை துாக்கி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன் வீடியோ காட்சிகளை பதிவிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர், இதை தான் ஆப்கன் ரசிகர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த காலங்களில் பலமுறை செய்திருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
This is what Afghan fans are doing.
— Shoaib Akhtar (@shoaib100mph) September 7, 2022
This is what they've done in the past multiple times.This is a game and its supposed to be played and taken in the right spirit.@ShafiqStanikzai your crowd & your players both need to learn a few things if you guys want to grow in the sport. pic.twitter.com/rg57D0c7t8