ஸ்காட்லாந்தை புரட்டியெடுத்த ஆப்கானிஸ்தான் - 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 பிரிவில் சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா ஷஷால் 44, ரஹ்மனுல்லா குர்பாஸ் 46, நஜிபுல்லா ஷாத்ரன் 59 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாயினர். இதனால் 10.2 ஓவரில் 60 ரன்களுக்கு ஸ்காட்லாந்து அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் முஜிப் உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளும், ரஷித்கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
