ஆப்கானில் ஒரு கோடி குழந்தைகளின் எதிர்காலம் ரொம்ப மோசமா இருக்கு: யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை

Afghanistan 10 million children
By Irumporai Aug 24, 2021 07:34 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது .

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது இந்த நிலையில் அப்கானில் உள்ள வேறு நாட்டிற்கு செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அங்கு, பெண்கள், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஆப்கானில் உள்ள சுமார் ஒரு கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அங்கு உள்ள குழந்தைகள் மருத்துவம், உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

10 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் இன்னும் ஓராண்டுக்குள் உயிரிழக்க நேரிடும் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.